சீனாவை தொடர்ந்து ஈரானில் வேகமாக பரவும் கொரோனா .! பலி எண்ணிக்கை உயர்வு.!

Default Image
  • ஈரானில் உள்ள ஹிய்ம் நகரில் கொரோனா வைரசால் 5 பேர் பாதிக்கப்பட்டது  உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது.
  • கொரோனா வைரசால் கடந்த 19-ம்தேதி 2 பேர் இறந்தனர்.இதையெடுத்து நேற்று மேலும் 2 பேர் இறந்ததாக ஈரான் சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.

ஈரான் நாட்டை சார்ந்த சில மாணவர்கள் இரண்டு வாரங்களுக்கு முன் சீனாவில் உள்ள வுகான் நகரில் இருந்து விமானம் மூலம் ஈரான் அழைத்து வரப்பட்டார்கள்.அழைத்து வரப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் 14 நாட்கள் தீவிர கண்காணிப்பில் வைத்து பரிசோதனை செய்த பின்னர் அவர்களுக்கு கொரோனா வைரஸ் இல்லை என உறுதி செய்யப்பட்ட பிறகு அவர்களின் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில் ஈரானில் உள்ள ஹிய்ம் நகரில் கொரோனா வைரசால் 5 பேர் பாதிக்கப்பட்டது  உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. ஆனாலும் கொரோனா வைரசால் 2 பேர் சிகிச்சை பலனின்றி கடந்த 19-ம்தேதி உயிரிழந்தனர்.

இதையெடுத்து நேற்று மேலும் 2 பேர் இறந்ததாக ஈரான் சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. இதனால் ஈரானில் கொரோனா வைரசால்  உயிரிழந்தவர்களின்  எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2300 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76,288 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவது குறைந்தாலும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்