சவூதி அரேபிய நாட்டிலுள்ள சில முக்கிய எண்ணெய் கிணறுகள் சென்ற வாரம் வான்வெளி தாக்குதல் மூலம் தகர்க்கப்பட்டது. இதனால் உலக நாடுகளில் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
இந்த தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. இருந்தாலும் ஈரான் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சுமத்தி வருகின்றனர். இதற்க்கு ஈரான் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் போர் தொடுக்க முற்பட்டால், கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டும் என எச்சரிக்கை விடப்பட்டது.
இந்நிலையில் சவூதி அரேபிய வெளியுறவு துறை அமைச்சர் தெரிவிக்கையில், ‘ தாக்குதலில் ஈடுபட்டவர்களை கண்டறிய நட்பு நாடுகளான, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த தாக்குதலை நடத்தியது ஈரான் தான் என நிரூபணமானால், உலக நாடுகள் சபை, எண்ணெய் கிணறுகள் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பை ஈரான் ஈடுகட்ட கூறவேண்டும். எனவும்,
கொமென் பிரிவினைக்கு பின்னர் ஈரான் இவ்வாறான தாக்குதலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இது சர்வதேச விதிகளை மீறுவது போல ஆகும். போர் என்பது எப்போதும் கடைசி ஆயுதமாக இருக்கட்டும் எனவும், தனது எதிர்ப்பை தெரிவித்தார்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…