டிரம்பை கொலை செய்யும் நபருக்கு ரூ.21கோடி பரிசு என அறிவித்த ஈரான் சபாநாயகர் .!

Default Image
  •  சில நாட்களுக்கு முன் ஈரான் படைத்தளபதி சுலைமானியை அமெரிக்கா ஆளில்லா குட்டி விமானம் மூலம் தாக்குதல் நடத்தி கொன்றது.
  • சுலைமானியை  டிரோன் மூலம் தாக்குதல் நடத்திக் கொன்ற டிரம்பை கொலை செய்யும் நபருக்கு ரூ.21. 35 கோடி பரிசு என சபாநாயகர் கூறினார்.

கடந்த சில நாட்களுக்கு முன் ஈரான் படைத்தளபதி சுலைமானியை அமெரிக்கா ராணுவம் ஆளில்லா குட்டி விமானம் மூலம் தாக்குதல் நடத்தி கொன்றது. தங்கள் தான் தாக்குதல் நடத்தியதாகவும் அமெரிக்கா ஒப்புக்கொண்டது.இதனால் அமெரிக்கா -ஈரான் இடையே போர் ஏற்படும் நிலவும் சூழல் உள்ளது.

சுலைமானியை கொன்றதற்கு பழிவாங்கும் விதமாக சுலைமானி சொந்தமான மாகாணமான கெர்மனில் ஒரு அரசியல்வாதி அமெரிக்க அதிபரை கொலை செய்வேன் என சபதம் எடுத்து உள்ளர். இந்நிலையில் மத்திய கெர்மன் மாகாணத்தை சார்ந்த சட்டப்பேரவை சபாநாயகரான அகமது ஹம்சே நேற்று எம்எல்ஏக்களிடம் பேசினார்.

அப்போது சுலைமானியை  டிரோன் மூலம் தாக்குதல் நடத்திக் கொலை செய்த அமெரிக்க அதிபர் டிரம்பை பழிவாங்க ஒவ்வொரு குடிமகனும் சபதம் எடுக்க வேண்டும். மேலும் டிரம்பை கொலை செய்யும் நபருக்கு ரூ.21. 35 கோடி பரிசு வழங்குவேன் என கூறினார்.

நமது அப்பாவி மக்களை கொலை செய்யும் நபர்களை அடியோடு அழிக்க நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது..?எனவும் கூறினார். இதற்கு முன் காசிம் சுலைமானின் இறுதி ஊர்வலத்தின் போது மூத்த அதிகாரி ஒருவர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலையை கொண்டு வருபவருக்கு 8 கோடி அமெரிக்க டாலர்கள் ( அதாவது இந்திய மதிப்பில் ரூ.576 கோடி) பரிசு வழங்கப்படும் என அறிவித்தார் என்பது குறிபிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்