ஈரான் விமான விபத்து.! பயணம் செய்த யாரும் உயிர்பிழைக்கவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.!
- ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரான் விமான நிலையத்திலிருந்து உக்ரைன் தலைநகருக்கு போயிங் 737 ரகத்தை சேர்ந்த விமானம்180 பேருடன் புறப்பட்டு சென்றது.
- தொழில்நுட்ப காரணத்தினால் விமானம் விழுந்து நொறுங்கியது .பயணம் செய்த யாரும் உயிர்பிழைக்கவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஈரான், அமெரிக்கா இடையே தற்போது போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், இன்று அதிகாலை ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரான் விமான நிலையத்திலிருந்து உக்ரைன் தலைநகருக்கு போயிங் 737 ரகத்தை சேர்ந்த விமானம்180 பேருடன் புறப்பட்டு சென்றது.
அதில் பயணிகள் ,விமான ஊழியர்கள் சென்றனர்.அப்போது விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலே கீழே விழுந்து நொறுங்கியது. இதனால் விமானம் தொழில்நுட்ப காரணத்தினால் விபத்து ஏற்பட்டதா..?அல்லது விமானம் தாக்கப்பட்டதா? என விசாரணை நடத்தி வந்த நிலையில் , விமானம் தொழில்நுட்ப காரணத்தினால் விழுந்ததாகவும் , விமானத்தில் பயணம் செய்த யாரும் உயிர்பிழைக்கவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இன்று அதிகாலை ஈராக்கின் அல் அசாத் பகுதியில் உள்ள அமெரிக்க படைகள் உள்ள ராணுவ தளத்தின் மீது ஈரான் 10-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.