ரபேல் விமானங்கள் நிறுத்தப்பட்ட தளம் அருகே ஏவுகணை தாக்குதல் ?

Default Image

ரபேல் விமானங்கள் நிறுத்தப்பட்ட தளம் அருகே ஏவுகணை தாக்குதல் நடைபெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு பிரான்சில் இருந்து இந்திய விமானப்படைக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்க இரு நாட்டு அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த விமானங்களை பிரான்சின் டசால்ட் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த 36 விமானங்களில் 6 விமானங்கள் பயிற்சி விமானங்கள், மற்ற விமானங்களில் இருப்பது போன்ற அனைத்து அம்சங்களும் பயிற்சி விமானங்களிலும் உள்ளது. அனைத்து ரபேல் விமானங்களும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் வழங்க வேண்டும் என்பது ஒப்பந்தம்.

முதல் 10 விமானங்களின் தயாரிப்பு பணி முடிவடைந்ததால் கடந்த அக்டோபர் மாதம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்ஸ் சென்று விமானங்களுக்கு பூஜையும் செய்தார். 10 விமானங்களில் 5 விமானங்கள் பயிற்சிக்காக பிரான்சிலேயே உள்ள நிலையில், மீதமுள்ள 5 விமானங்கள்  பிரான்சில் இருந்து இந்தியாவை நோக்கி நேற்று முன்தினம்  தனது பயணத்தை தொடங்கியது.

இந்தியா-பிரான்ஸ் இடையே 7 ஆயிரம் கி.மீ. தூரம் என்பதால் ரபேல் போர் விமானங்கள் நடுவானில் எரிபொருள்கள் நிரப்பிக் கொள்ளவதாகவும், இடையில் அமீரகத்தில் உள்ள அல் தஃப்ரா விமான தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.  ரபேல் விமானங்கள் இந்த விமான தளத்தில் நிறுத்தப்படுவதற்கு முன்னர் தான் ஈரான் ஏவுகணை பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. அந்த விமான தளம் குறிவைக்கலாம் என்று எச்சரிக்கை வெளியானது.இதனையடுத்து அல் தஃப்ரா விமான தளம் அருகே ஈரானின் ஏவகணை விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ரபேல் விமானம் இந்தியாவில் உள்ள அம்பாலா விமான தளத்தில் தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்