ஈரானின் டெஹ்ரான் விமான நிலையத்தில் இருந்து கடந்த 8-ம் தேதி உக்ரைன் பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது.அந்த விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்திலே கீழே விழுந்து நொறுங்கியது. இதனால் இந்த விமானத்தில் பயணம் செய்த 176 பயணிகளும் இறந்ததாக ஈரான் அறிவித்தது.
இந்த தாக்குதல் அமெரிக்க நடத்தியதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் உக்ரைன் விமானம் ஏவுகணையால் தாக்கப்பட்டு வெடித்து சிதறும் காட்சியை இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் வெளியிட்டனர்.இதை தொடர்ந்து ஈரான் இராணுவம் அமெரிக்க போர் விமானம் என எண்ணி தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாக ஒப்புக்கொண்டனர்.
இந்த சம்பவத்திற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு அதிபர் ஹசன் ரவுகானி கூறினார்.இந்நிலையில் உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக ஈரானின் சிவில் விமான போக்குவரத்து துறை முதல்கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்து உள்ளது.
அதில் உக்ரைன் விமானத்தை 2 டோர் எம்-1 ஏவுகணையால் தாக்கியது தெரியவந்து உள்ளது.இந்த ஏவுகணைகள் குறுகிய தூரம் சென்று தாக்கக்கூடியது.
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள்…
வாஷிங்டன் : அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமான ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸின் ப்ளூ கோஸ்ட் மிஷன் 1 கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்…
ஹைதராபாத் : தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக வலம் வந்த கல்பனா அளவுக்கு அதிகமான…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்ரேலியா அணியை வீழ்த்தி…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் காட்டில் மழை தான் என்கிற வகையில், அவருடைய படங்கள் தொடர்ச்சியாக ஹிட் ஆகி கொண்டு வருகிறது.…
சென்னை : சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே புதிய வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், இதற்கு இடையிலான…