ஈரான் குண்டுவெடிப்பு – பலி எண்ணிக்கை 103-ஆக உயர்வு..!

ஈரான் நாட்டின் பாக்தாத் நகரில் கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்க நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரான் ராணுவத்தின் மேஜர் ஜெனரல் காசிம் சுலைமான் கொல்லப்பட்டார். ஜெனரல் காசிம் சுலைமானி படுகொலை செய்யப்பட்ட நான்காவது ஆண்டு நினைவு நாளில் தெற்கு நகரமான கெர்மானில் உள்ள சாஹேப் அல்-ஜமான் மசூதிக்கு அருகே சுலைமானிக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அப்போது திடீரென இரண்டு முறை பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. தாக்குதலுக்குப் பிறகு குண்டுவெடிப்புகளில் 73 பேர் இறந்ததாகக் கூறப்பட்டது. ஆனால் பின்னர் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்படி  இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் இதுவரை 103 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த குண்டுவெடிப்புகளில் 210 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தாக்குதலுக்கான காரணமும் தெளிவாகத் தெரியவில்லை. ஈரானிய புலனாய்வு அமைப்புகள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றன.

.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்