கடந்த வெள்ளிக்கிழமை பாக்தாத்தில் உள்ள விமான நிலையத்தின் அருகே அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் நடத்திய தாக்குதலில் ஈரானின் ரகசியப் படைப் பிரிவுத் தலைவா் காசிம் சுலைமானி உள்பட 9 போ் இறந்தனர்.இந்த தாக்குதலால் ஈரானுக்கும்,அமெரிக்காவுக்கும் இடையே போா் ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே ஈரான் அரசு சுலைமானியின் மரணத்திற்கு நிச்சயம் பழி தீர்க்க உறுதியாக உள்ளது .ஈரான் நாடாளுமன்றத்தில், அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனை தீவிரவாத அமைப்பாக மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் இந்த பதற்றமான சூழலில் ஈரான் ராணுவம், ஈராக்கில் உள்ள அமெரிக்க விமானப் படைத்தளமான அல் அசாத் பகுதியில் இருந்த படைதளத்தின் மீது ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.இந்த தாக்குதலை பெண்டகனும் உறுதி செய்த நிலையில்,தங்கள் நாட்டு படைகளுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தொடந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…