பழிவாங்கத் துடிக்கும் ஈரான் ! அமெரிக்க படை தளம் மீது ஏவுகணை தாக்குதல்

Default Image
  • ஈரானின் ரகசியப் படைப் பிரிவுத் தலைவா் காசிம் சுலைமானி ஆளில்லா விமானம் மூலம் நடத்திய தாக்குதலில்  உயிரிழந்தார்.
  • இதனால் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தொடர்ந்து பதற்றம் நீடித்து உள்ளது. 

கடந்த வெள்ளிக்கிழமை பாக்தாத்தில் உள்ள விமான நிலையத்தின் அருகே அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் நடத்திய தாக்குதலில் ஈரானின் ரகசியப் படைப் பிரிவுத் தலைவா் காசிம் சுலைமானி உள்பட 9 போ் இறந்தனர்.இந்த தாக்குதலால் ஈரானுக்கும்,அமெரிக்காவுக்கும் இடையே போா் ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே ஈரான் அரசு சுலைமானியின் மரணத்திற்கு நிச்சயம் பழி தீர்க்க உறுதியாக உள்ளது .ஈரான் நாடாளுமன்றத்தில், அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனை தீவிரவாத அமைப்பாக  மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் இந்த பதற்றமான சூழலில் ஈரான் ராணுவம்,  ஈராக்கில்  உள்ள அமெரிக்க விமானப் படைத்தளமான  அல் அசாத் பகுதியில் இருந்த படைதளத்தின் மீது  ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.இந்த தாக்குதலை  பெண்டகனும் உறுதி செய்த நிலையில்,தங்கள் நாட்டு படைகளுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தொடந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்