கோடிக்கணக்கில் ஏலம் போகும் மனிஷ் பாண்டே, கிறிஸ் வோக்ஸ், ஷேன் வாட்சன்….
2018 ஐ.பி.ல் ஏலம்: மனிஷ் பாண்டே – ரூ.11 கோடி, கிறிஸ் வோக்ஸ் – ரூ.7.40 கோடி, ஷேன் வாட்சன் – ரூ.4 கோடிக்கு ஏலம்.
மனிஷ் பாண்டேவை ரூ.11 கோடிக்கு சன் ரைசர்ஸ் அணி ஏலம் எடுத்தது. ரூ 1 கோடி அடிப்படை தொகை நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ரூ 11 கோடிக்கு மனிஷ் பாண்டே ஏலம் எடுக்கப்பட்டார். இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸை ரூ.7.40 கோடிக்கு வாங்கியது. 2017 ஐ.பி.ல். போட்டியில் கொல்கத்தா அணிக்காக கிறிஸ் விளையாடினார். மேற்கிந்திய வீரர் கார்லஸ் பிரத்வைட்டை ரூ.2 கோடிக்கு சன் ரைசர்ஸ் அணி வாங்கியது. அவர் 2017 ஐ.பி.ல். போட்டி டெல்லி அணிக்காக விளையாடினார். ஆஸ்திரேலியா வீரர் ஷேன் வாட்சனை ரூ.4 கோடிக்கு, கெதர் ஜாதவை ரூ7.80 கோடிக்கு சென்னை அணி வாங்கியது. ஷேன் வாட்சன் 2017 ஐ.பி.ல். போட்டி டெல்லி அணிக்காக விளையாடினார்..
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் …