IPL 2018: சென்னை அணியை பழிதீர்த்தது மும்பை அணி அபார வெற்றி .!ரோஹித் அபார ஆட்டம்..!
இன்று 27 வதுதொடர் புனேவில் உள்ள மாராட்டிய ஸ்டேடியத்தில் வைத்து நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின .
இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதில் முதலாவது களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 169 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது .
முதலில் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்கவீரர்களாக ராயடு மற்றும் வாட்சன் களமிறங்கினர் .
ராயுடு 46 ரன்களிலும் மற்றும் கேப்டன் தோணி 26 ரன்களிலும் ,வாட்சன் 12 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார் .
ரைனா 75 ரன்களை குவித்து தனது அபார ஆட்டத்தை வெளிபடுத்தினார் .
அடுத்து 170 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி.
அணியின் தொடக்கவீரர்களாக சூர்யகுமார் மற்றும் லூயிஸ் களமிறங்கினர் .
சூர்யகுமார் 44 ரன்களிலும் மற்றும் லூயிஸ் 47 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார் .
கேப்டன் ரோஹித் 56 ரன்களிலும் மற்றும் பாண்ட்யா 13 ரன்களிலும் களத்தில் .
20 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்டு வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது .