“பேஸ்புக் அக்கவுண்டில் இருந்து ஆட்டோமெட்டிக்காக லாக்-அவுட் ஆகுகிறது”- ட்விட்டரில் கொந்தளிக்கும் பயனர்கள்!
ஐபோன் பயனர்கள் பலர், நேற்று மாலை தங்கள் பேஸ்புக்அக்கவுண்டில் இருந்து ஆட்டோமெட்டிக்காக லாக்-அவுட் ஆகியதாக பலரும் புகாரளித்து வருகின்றனர்.
உலகளவில் உள்ள ஐபோன் பயனர்கள் பலர், நேற்று மாலை தங்கள் பேஸ்புக்அக்கவுண்டில் இருந்து ஆட்டோமெட்டிக்காக லாக்-அவுட் ஆகுகிறதாக புகாரளித்து வருகின்றனர். பலர், re-login செய்து வருவதாகவும், two step verification முறையில் லாகின் செய்து பார்த்தும் வருகின்றனர். லாகின் ஆகாத நிலையில் பயனர்கள், பேஸ்புக்கின் இந்த பிரச்சனை குறித்து ட்விட்டரில் புகாரளித்து கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில், “பேஸ்புக் அக்கவுண்டில் இருந்து ஆட்டோமெட்டிக்காக லாக்-அவுட் ஆகுகிறது, ஏன்?” என கேள்வியெழுப்பிக்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து பேஸ்புக் நிறுவனம், இந்த பிரச்னையை நாங்கள் அறிந்துள்ளதாகவும், பிரச்சனை குறித்து ஆராய்ந்து, விரைவில் அதனை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அந்த பதிவில் தெரிவித்துள்ளது.