குரங்குகளில் கொரோனாவை கட்டுப்படுத்தக்கூடிய முன்மாதிரி தடுப்பூசி ஒன்றை போஸ்டன் மருத்துவ ஆய்வின் நிறுவன விஞ்ஞானி டாக்டர் டான் பரூச் கண்டுபிடிப்பு.
கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் தீவிரமாக இருக்கும் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்துடன் இணைந்து டான் பரூச் நடத்திய இந்த ஆராய்ச்சியில் 9 ரீசஸ் குரங்குகளின் உடலில் கொரோனா வைரசுகளை செலுத்தப்பட்டன. அத்துடன், இந்த முன்மாதிரி தடுப்பூசியும் அந்த குரங்குகளுக்கு போடப்பட்டது. பின்னர் சில தினங்களில் நுரையீரல் பாதிப்பு, நிம்மோனியா உள்ளிட்ட தொற்றியின் அறிகுறிகளை குரங்குகள் காட்டினர். அதன்பிறகு குரங்குகளிடம் ஆன்டிபாடிக் திறன் அதிகரித்ததை அடுத்து தொற்றிலில் இருந்து முழுவதும் குணமடைந்து கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து 35 நாட்களுக்கு பிறகு அந்த குரங்குகளுக்கு மீண்டும் கொரோனா வைரசுகள் செலுத்தப்பட்டன. அதன்பிறகு நடத்தப்பட்ட ஆய்வில் குரங்குகளின் உடலில் அபரிவிதமான ஆன்டிபாடிக் உருவாகி வைரஸ்கள் அளிக்கப்பட்டது உறுதியானது. குரங்குகளிடம் இருந்து தடுப்பூசி பலன் மனிதர்கள் இடமும் கிடைக்குமா என்று உறுதி செய்யப்படாத நிலையில், இந்த முடிவுகள் கொரோனா தடுப்பூசிகள் விரைவில் கண்டுபிடித்து விடலாம் என்று ஊக்கமளிப்பதாக டாக்டர் டான் பரூச் தெரிவித்துள்ளார்.
இதற்குமுன் இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கொரோனாவுக்கு தடுப்பூசி உருவாக்கி குரங்குகளுக்கு சோதனை நடத்தியதில் நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளது என்றும் இந்த தடுப்பூசி மனிதர்களுக்கு சோதித்து பார்க்க உள்ளது. இதன் முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என லண்டன் கிங் கல்லூரியின் மருந்து மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளனர். மேலும் மனிதர்களுக்கு நடத்தும் சோதனை வெற்றி பெற்றுவிட்டால் இந்த ஆண்டு இறுதிக்குள் 10 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தும் அளவுக்கு மருந்தினை உற்பத்தி செய்யப்படும் என்று தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…