அறிமுகமான ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்;அதன் விலை மற்றும் அம்சங்கள் …!

Published by
Edison

75 வது சுதந்திர தினத்தன்று ஓலா நிறுவனம் தனது S1 மற்றும் S1 Pro என இருவகையாக ஸ்கூட்டர் மாடல்களை இன்று அறிமுகம் செய்துள்ளது.

வாகனங்களுக்கான பெட்ரோல்,டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வால்,பெரும்பாலான மக்கள் மின்சார வாகனங்களின் பக்கம் தங்களது கவனத்தை செலுத்தியுள்ளனர்.இதனால்,இந்தியாவில் தற்போது மின்சார வாகனங்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது.

அந்த வகையில்,ஓலா இ-ஸ்கூட்டர் முன்பதிவு http://olaelectric.com என்ற இணையதளத்தை பயன்படுத்தி கடந்த ஜூலை 16 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றது.அதன்படி,ஓலா இ-ஸ்கூட்டரை வாங்க விரும்புவோர் முன்தொகையாக ரூ. 499 கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.மேலும்,எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்து 7-10 நாட்களுக்குள் பணத்தைத் திரும்பப் பெறலாம் என்றும்,முன்பதிவு செய்ய உங்களுக்கு எந்த ஆவணங்களும் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.ஆனால்,சந்தையில் அதன் அறிமுகத் தேதி,விலை போன்றவை தெரிவிக்கப்படாமல் இருந்தது.

அறிமுகம் & விலை:

இந்நிலையில்,75 வது சுதந்திர தினத்தன்று ஓலா நிறுவனம் தனது S1 மற்றும் S1 Pro என இருவகையாக ஸ்கூட்டர் மாடல்களை இன்று அறிமுகம் செய்துள்ளது.அதன்படி,S1 வகை ஸ்கூட்டரின் அதிகபட்ச விலை ரூ.99,999 மற்றும் S1 Pro வகை ஸ்கூட்டரின் விலை ரூ.1,29,999 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணம்:

இந்த S1 மாடல் ஓலா ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 121 கி.மீ வரை பயணம் செய்யலாம்.இதன் அதிகபட்ச வேகம் 90 கி.மீ ற்றும் 3.6 வினாடிகளில் 0 முதல் 40 கிமீ வேகத்தை எட்டும்.அதேபோல,S1 PRO மாடல் ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 181கி.மீ வரை பயணம் செய்யலாம்.இதன் அதிகபட்ச வேகம் 115 கி.மீ. மற்றும் 3 வினாடிகளில் 0-40 கிமீ வேகத்தையும், 5- வினாடிகளில் 0-60 கிமீ வேகத்தையும் அடைய முடியும்.மேலும்,எஸ் 1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் நார்மல், ஸ்போர்ட் மற்றும் ஹைப்பர் ஆகிய 3 வகையான பயண நிலைகள்(ரைடிங் மோட்களும்) உள்ளன.

இவ்விரு ஸ்கூட்டர்களும் செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்றும் மற்றும் அக்டோபரில் டெலிவரி தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.

ஓலா எஸ் 1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் உள்ள அம்சங்கள்:

  • வாய்ஸ் கண்ட்ரோல்,உள்ளமைக்கப்பட்ட ஸ்பீக்கர்கள்(In-built speakers),சாவி இல்லாத அணுகல்(Keyless access),கருவி கிளஸ்டரில் தனிப்பயனாக்கப்பட்ட மனநிலைகள் (Personalised Moods on instrument cluster) போன்றவை உள்ளன.
  • ஏதர் 450 எக்ஸ் தொடுதிரை டாஷ்போர்டின் உதவியுடன் கால் அழைப்புகளை பெறவும் அல்லது நிராகரிக்கவும் முடியும்.மேலும்,பாடல்கள் கேட்க முடியும்.
  • இதன் உதவியுடன் நீங்கள் வாகன புள்ளிவிவரங்களைக் காணலாம், உங்கள் வாகனத்திற்கான சேவை நியமனத்தை பதிவு செய்யலாம், அதைக் கண்காணிக்கலாம்.

இது தொடர்பாக,ஓலா நிறுவனத்தின் தலைவர் பவிஷ் அகர்வால் கூறியதாவது:”ஓலா எஸ் 1 அறிமுகம்.இவை சிறந்த செயல்திறன், சிறந்த தொழில்நுட்பம் மற்றும் சிறந்த வடிவமைப்பு மற்றும் உலகத்திற்காக,அனைத்தும் இந்தியாவில் உருவாக்கப்பட்டது”,என்று தெரிவித்தார்.

நாட்டிலேயே ஓலா நிறுவனத்தின் மிகப்பெரிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி தொழிற்சாலை கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் அமைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Edison

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

6 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

18 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

24 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

24 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

24 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

24 hours ago