கவின் நடிப்பில் உருவாகியுள்ள லிப்ட் படத்தின் டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.
பிக் பாஸ் மூலம் புகழ் பெற்ற நடிகர் கவின் நடிப்பில் உருவாகியுள்ள படம் “லிப்ட்”. இந்த படத்தில் நடிகர் கவினுக்கு ஜோடியாக நடிகை அமிர்த அமலா நடித்துள்ளார். இயக்குனர் வினித் வரபிரசாத் இயக்கத்தில் இப்படத்தை லிப்ரா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் பிரிட்டோ மைக்கல் இசையமைத்துள்ளார்.
படத்தின் பர்ஸ்ட் லுக் பஸ்டர், மோஷன் போஸ்டர், இரண்டு பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பைப்பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாகியது என்றே கூறலாம்.
இந்நிலையில், படத்தின் அணைத்து வேலைகளும் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகவுள்ளது. திரையரங்குகளில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில்,லிப்ட் படம் வரும் அக்டோபர் 1-ஆம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என நடிகர் கவின் நேற்று தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து தற்போது லிப்ட் படத்தின் டிரைலர் வெளியிடபட்டுள்ளது. திகில் நிறைந்த டிரைலரை பார்த்த ரசிகர்கள் படத்தை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். மேலும், இந்த டிரைலரை நடிகர் சிவகார்திகேயன் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…