இந்த செடியை சாதாரணமாக நினச்சீராதீங்க…! இதுல எவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கு தெரியுமா…?
அதிகமான வீடுகளில் அழகுக்காக வைக்கும் செடி தான் நந்தியாவட்டம். இது ஒரு மூலிகை செடியாம். இது நம்மில் அநேகருக்கு தெரியாத ஒன்று தான். இந்த செடியின் அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது தான்.
இந்த செடியில் மூன்று விதமான செடிகள் உள்ளது.
- ஓரிதழ் நந்தியாவட்டம்.
- ஈரிதழ் நந்தியாவட்டம்.
- மூவிதல் நந்தியாவட்டம்.
மருத்துவ பயன்கள் :
- கண்கள் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் இதற்க்கு உள்ளது. தண்ணீரில் 10 பூக்களை எடுத்து போட்டுவிட்டு, காலையில் எழுந்தவுடன் அந்த நீரில் கண்களை முழித்து, கண்களை அந்த தண்ணீரில் கழுவினால் கழுவினால் கண் நோய்கள் குணமாகும்.
- பல்வலிக்கு செடியின் வேர்பகுதியை சிறிதளவு எடுத்து, நன்கு வாயில் மென்று வந்தால் பல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
- நமது உடலில் ஏற்படும் காயங்களில், அந்த செடியின் பாலை விட்டால் குணமாகும்.
- இந்த செடியின் இலையை பறித்து நீரில் கொதிக்க வைத்து. அந்த தண்ணீரை வடிகட்டி குளித்து வந்தால் இரத்த அழுத்தம் சரியாகும்.
- ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த செடியின் பட்டை தூளாக்கி, கண் மற்றும் சரும பிரச்சனைகளுக்கு பயன்படுத்துகின்றனர்.
TRENDSTIME