இந்தியா முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது.இந்நிலையில் இன்று 6-வது சர்வதேச யோகா தினத்தை ஒட்டி நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி யோகா குறித்து உரையாற்றியுள்ளார்.
சர்வதேச யோகா தினமானது ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தை வரவேற்கும் விதமாகவும் உடல் ஆரோக்கியத்தை வழுப்படுத்தும் கலைகளில் ஒன்றாக திகழக்கூடியதுமான யோகா நம்பிக்கையை விதைக்கும் என நாட்டு மக்களிடம் இன்று காலை 6.30 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.
நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி 6ஆவது சர்வதேச யோகா தினத்திற்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும். சர்வதேச அளவில் ஒற்றுமையை பறைசாற்றும் நாளாக இந்நாள் அமைந்துள்ளது.
இந்த ஆண்டு குடும்பத்துடன் யோகா செய்யுங்கள், கொரோனா பரவி வரும் நிலையில் நாட்டு மக்கள் யோகா கற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளதாக தெரிவித்த பிரதமர் உங்களது அன்றாட வாழ்க்கையில் யோகாவை ஒரு அங்கமாக பழக்குங்கள். யோகா உடல் வலிமையுடன் நம் மன வலிமையையும் மேம்படுத்துகிறது. யோகாவிற்கு மதம், மொழி, நாடு என்ற எந்த பேதமும் கிடையாது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்த உலகம் தற்போது யோகாவின் பயன்களை உணர்ந்துள்ளது. பகவத் கீதையில் கூட கிருஷ்ணர் யோகா குறித்து குறிப்பிட்டுள்ளார். கொரோனாவில் இருந்து மீண்டு வர யோகா செய்யுங்கள் என்று பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்தார்.
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல்…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஏப்ரல் 21, 2025 அன்று புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.…
கடலூர் : தமிழ்நாட்டில் 2026-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் வியூக நகர்வுகளை…
கொல்கத்தா : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரருமான…