அருமையான பரிசு “யோகா”-அமித்ஷா ட்விட்
சர்வதேச யோகா தினமானது ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தை வரவேற்கும் விதமாகவும் உடல் ஆரோக்கியத்தை வழுப்படுத்தும் கலைகளில் ஒன்றாக திகழக்கூடியதுமான யோகா நம்பிக்கையை விதைக்கும்.
இந்நிலையில் சர்வதேச யோகா தினத்தை ஒட்டி நாட்டு மக்களிடம் இன்று காலை 6.30 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.
இந்நிலையில் உள்துறை மந்திரி அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அவர் பதிவிட்டதாவது:
யோகா என்பது உடல் மற்றும் மனம், செயல் மற்றும் சிந்தனை மற்றும் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு கருவி. பிரதமரின் முயற்சி யோகாவை உலகளவில் ஏற்றுக்கொள்ள வழிவகுத்து உள்ளது, இது முழு மனிதகுலத்திற்கும் இந்திய கலாச்சாரத்தின் ஒரு அருமையான பரிசு என்று பதிவிட்டுள்ளார்.
Prime Minister Shri @narendramodi ji’s address to the nation on International Day of Yoga, tomorrow, 21st June.
Do tune in at 6:30AM!
‘’Yoga At home, Yoga with Family’’ pic.twitter.com/yl197fbBv6
— Amit Shah (Modi Ka Parivar) (@AmitShah) June 20, 2020