சர்வதேச மகளிர் தினம் !!இன்றைய காலகட்டத்தில் பெண்களின் வாழ்க்கைத்தரம் என்ன ???
மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் (International Women’s Day) கொண்டாடப்படுகிறது.
சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 8-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த பெண்கள், தற்போது வானில் பறந்து கொண்டிருக்கின்றனர்.பெண் வயிற்றில் பிறந்து, பெண்ணால் வளர்க்கப்பட்டு, பெண்ணோடு வாழ்பவர்கள்தான் எனினும், பெண்ணின் துயரங்களையும், விருப்பங்களையும், உணர்வுகளையும் ஆண்கள் தெரிந்து கொள்வதில்லை. தெரிந்து கொள்ள இந்த ஆணாதிக்க சமூகம் விரும்புவதுமில்லை.அதற்கு வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றியே இந்த மகளிர் தினமாகும். இந்த சர்வேதேச மகளிர் தினம் கொண்டாடுவதற்கு காரணமான போராட்டத்திற்கான வெற்றிகள் அவ்வளவு எளிதாக கிட்டவில்லை. ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள்தான். 1920-ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் ரஷ்யாவை சேர்ந்த அலெக்ஸாண்டரா கேலன்ரா கலந்து கொண்டார். அவர்தான் சர்வேதேச மகளிர் தினத்தை ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி நடத்த வேண்டும் என்று பிரகடனம் செய்தார். அதுமுதல் உலகின் பல்வேறு நாடுகளிலும் மகளிர் தினக் கொண்டாட்டங்கள் நடைபெற ஆரம்பித்தன.
புர்கினியா பெசோ, உஸ்பெஸ்கிஸ்தான், வியட்நாம், ரஷ்யா, உக்ரைன்,ஆப்கானிஸ்தான், ஆர்மேனியா, அஜர்பைஜான், பெலாரஸ், கம்போடியா, கியூபா, எரித்திரியா, கஜகஸ்தான், மால்டோவா, மங்கோலியா, மான்டேநெக்ரோ, தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான் ஆகிய நாடுகளில் உலக மகளிர் தினத்துக்கு விடுமுறை வழங்கப்படுகிறது என்பது பெண்கள் போராட்டத்திற்கு கிடைத்த்து மாபெரும் வெற்றி ஆகும். மென்மைக்கு ஒப்பானது தான் பெண்மை என்று சொல்லி சரித்திரத்திரத்தில் பெண்களின் திறமைகளை பல்வேறு இடங்களில் இருட்ட்டைப்பு செய்யப்பட்டிருந்தாலும் கூட அதற்கு சற்றும் சளைக்காமல் அணு முதல் அண்டம் வரை தமது திறமைகளை நிலைநாட்டிய வண்ணமே அன்று முதல் இன்று வரை பெண் இனம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
ஆனால் பெண்களையும் அவர்கள் செய்த தியாகத்தையும் சாதனைகளையும் ஒரு கணமாவது சிந்தித்துப்பார்க்க வேண்டியது ஒரு சமுதாயத்தின் கடமையாகும். பெண்கள் சம உரிமைக்காக எத்தனையோ பெண்கள் போர்க்கொடி ஏந்தி போராடி இருக்கிறார்கள்.ஆனாலும் கூட சமுதாய ரீதியாகவும் உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் இன்று வரை முடக்கப்பட்ட வண்ணமே இருக்கின்றார்கள். இதற்கு எடுத்துகாட்டாக எத்தனையோ செய்திகளை அன்றாட வாழ்க்கையில் பெண்கள் சந்தித்துக்கொண்டே தான் இருக்கிறார்கள். பெண்களின் முன்னேற்றத்திற்கு எத்தனையோ பெண்கள் முன்னுதாரனமாக வாழ்ந்துகாட்டியிருந்தாலும் கூட இன்னும் இன்றைய காலகட்டத்தில் பெண்களின் வாழ்க்கைத்தரம் முன்னேறி இருக்கின்றதா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
சமீப காலமாகத்தான் இந்தியாவில் சர்வேதேச தின கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ளன.