யூ.டி.டி. சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டி ஜூன் 14-ஆம் தேதி தொடக்கம்…!!

Default Image

 

கடந்த ஆண்டு இந்தியாவில் கிரிக்கெட்டில் ஐ.பி.எல்,கால்பந்தில் ஐ.எஸ்.எல் போன்ற வரிசையில் யூ.டி.டி. என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டி சென்னை,தில்லி,மும்பை முக்கிய நகரங்களில் நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான 2-வது யூடிடி. சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டி ஜூன் 14ஆம்தேதி முதல் ஜூலை 1-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 6 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான போட்டிகள் புனே,தில்லி,கொல்கத்தா ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது.ஜூன் 14-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை நடைபெறும் போட்டிகள் மகாராஷ்டிராவின் புனேயிலும், 20-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறும் போட்டிகள் தலைநகர் தில்லியிலும்,ஜூன் 26-ஆம் தேதி முதல் ஜூலை 1-ஆம் தேதி வரை நடைபெறும் போட்டிகள் மேற்கு வாங்க தலைநகர் கொல்கத்தாவிலும் நடைபெறுகிறது. மொத்த பரிசு தொகை ரூ.3 கோடியாகும்.சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ.1 கோடியும்,2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.75 லட்சமும், அரை இறுதியில் தோற்கும் அணிகளுக்கு தலா ரூ.50 லட்சமும் வழங்கப்படுகிறது. 2-வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் மார்ச் 28-ஆம் தேதி நடைபெறுகிறது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்