உலகம் முழுவது ஊரடங்கு… உணவின்றி அமைப்பு சாரா தொழிலாளர்கள் இறந்து விடுவார்கள்… எச்சரிக்கும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு…

உயிர்க்கொல்லி வைரஸ் தொற்றான கொடிய கொரோனா வைரஸ் நோய் பரவலால் உலகம் எங்கிலும் மக்களை வெளியேற விடாமல் ஊரடங்கு உத்தரவுகள் போடப்பட்டுள்ளது. அனைத்து நாடுகளிலும் இந்த ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதிலிருந்து, ஐக்கிய நாடுகளின் சபையின் ஒரு அங்கமான சர்வதேச தொழிலாளர் அமைப்பு, மக்களின் வேலைவாய்ப்புகளில் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து கண்காணித்து தொடர்ச்சியாக அறிக்கைகளையும் புள்ளிவிவரங்களையும் அந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், புதன் கிழமையான நேற்று (ஏப்ரல் 29) அந்நிறுவனத்தால் வெளியிடப்பட்ட மூன்றாவது பதிப்பில், உலகளவில் 330 கோடி தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் 200 கோடி தொழிலாளர்கள் முறைசாரா பொருளாதாரத்தில் உள்ளனர். இந்த தொழிலாளர்கள் சந்தையில் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்கள் ஆவர். இவர்கள் தற்போது, கொரோனா வைரசால் பொருளாதாரம் சரிந்துள்ளதால் 160 கோடி தொழிலாளர்களின் வாழ்வு கேள்விக்குறியாகியுள்ளது. ஏற்ற வருமானம் ஈட்டும் திறனை கடுமையாக பாதித்துள்ளது. எனவே இந்த அமைப்பு சாரா தொழிலாளர்களையும், சிறு நிறுவனங்களையும் காக்க தற்போது துரித நடவடிக்கைகள் தேவை என சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பு கூறியுள்ளது. மேலும் இது குறித்து சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தலைவர், கை ரைடர் கூறியுள்ளதாவது, கோடிக்கணக்கான மக்களுக்கு வருமானம் இல்லை எனில், அவர்களுக்கு உணவு இல்லை, பாதுகாப்பு இல்லை, எதிர்காலம் இல்லை என்று பொருள். உலகளவில் லட்சக்கணக்கான தொழில்கள் மூச்சை நிறுத்தும் நிலையில் உள்ளன. அவர்களுக்கென சேமிப்புகளோ, கடன் வாங்கும் சூழலோ இல்லை. இது தான் உலகின் உண்மை நிலை. அவர்களுக்கு உடனடியாக உதவவில்லை என்றால் அவர்கள் இறந்து போவார்கள்” என அவர் எச்சரித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“என்னால் பிரச்னை வேண்டாம் என நினைக்கிறேன்” – துரை வைகோ.!
April 19, 2025