கடந்த மாதம் 24-ம் தேதி முதல் உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்ய படைகள் பலமுனை தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா நடத்தி வரும் நிலையில் ரஷ்யா – உக்ரைன் இடையே நடைபெற்ற 4 சுற்று பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இருப்பினும் போர் தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக வாக்கெடுப்புக்கு நடத்தப்பட்டது. ரஷ்யாவுக்கு எதிராகப் பெரும்பான்மையான நாடுகள் வாக்களித்தனர்.
சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு:
ஆனால், ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தனக்கு எதிரான வாக்கெடுப்பு தீர்மானத்தை தோல்வி அடைய செய்தது. இதற்கிடையில், ரஷ்யா தங்கள் மீது இனப்படுகொலையை நடத்தி வருவதாக சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், ரஷ்யா மீதான குற்றசாட்டை விசாரித்த சர்வதேச நீதிமன்றம் உக்ரைனில் ராணுவ நடவடிக்கையை நிறுத்துமாறு நேற்று உத்தரவிட்டது.
உத்தரவை ஏற்க முடியாது:
இந்நிலையில், தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்க முடியாது என்ற ரஷ்ய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சர்வதேச நீதிமன்ற உத்தரவை நிராகரித்த ரஷ்யா, உக்ரைனின் தலைநகர் கீவில் குடியிருப்புகள் மீது இன்று தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. பன்னாட்டு ஒப்பந்தங்களின் படி சர்வதேச நீதிமன்ற உத்தரவு ரஷ்யா கட்டுப்படுத்தும் என உக்ரைன் கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…