இன்று சர்வதேச செஸ் தினம்..!இது குறித்து ஒரு பார்வை..!

Default Image

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 20 ஆம் தேதி சர்வதேச சதுரங்க (செஸ்) தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஒரு உலக நிறுவனமாக பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு தொடங்கப்பட்டது. பொதுவாக இவை பிரெஞ்சு மொழியில் FIDE (ஃபீடே) என அழைக்கப்படுகின்றன.FIDE பிரான்சின் பாரிஸ் நகரில்1924 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி அமைக்கப்பட்டது.இந்த தினம் ஆண்டுதோறும் சர்வதேச சதுரங்க (செஸ்) தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.தற்போது இந்நிறுவனத்தில் 150 க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

உலகில் உடல் வலிமையை அதிகரிக்க பல விளையாட்டுகள் காணப்பட்ட போதிலும்கூட,அறிவாற்றலை வளர்க்க உதவும் விளையாட்டுகள் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளன.அவற்றில் முதன்மையானது சதுரங்க விளையாட்டு.இவை புராதன காலங்கள் முதல் இன்று வரை மதிக்கப்படுகின்றன.

சதுரங்க விளையாட்டு:

இது இருவர் விளையாடும் ஒரு விளையாட்டாகும். ஒரு பக்கத்துக்கு 16 காய்கள் வீதம், 32 காய்கள் இவ்விளையாட்டில் பயன்படுகின்றன. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக இரண்டு நிறங்களில் காய்கள் அமைந்திருப்பது வழக்கம்.பொதுவாக,64 கட்டங்களும் கறுப்பு,வெள்ளை நிறங்களில் மாறி மாறி அமைந்திருக்கும்.

மூளைக்கு வேலை :

சதுரங்க விளையாட்டு அதிர்ஸ்டத்தை நம்பி விளையாடும் விளையாட்டல்ல மாறாக மூளைக்கு வேலை தரும் ஒரு விளையாட்டாக உள்ளது.மேலும், இது ஒரு கலையாகவும் அறிவியலாகவும் கூட கருதப்படுகிறது.ஏனெனில்,செஸ் விளையாடுவதால் அறிவாற்றல் அதிகரிக்கும் என்பதை பல்வேறு ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

மேலும்,சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு சதுரங்கம் விளையாட கற்றுத்தருவது அவர்களின் அறிவாற்றல் வளர பெரிதும் உதவுகிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.இதனால்,ரஷ்யாவில்,4 வயதில் இருந்தே தனது குழந்தைகளுக்கு பெற்றோர்கள் இந்த விளையாட்டை கற்றுத் தருகின்றனர்.

இதனையடுத்து,சதுரங்கம் விளையாடுவதால் முதியவர்களுக்கு நினைவாற்றம் குறையாமல் இருப்பதாக ‘தி நியூ இங்கிலாந்து ஜார்னல் ஆஃப் மெடிசின்’ (The new england journal of medicine) நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த விளையாட்டு எங்கு தோன்றியது என பல்வேறு கருத்து வேறுபாடு நிலவினாலும்,இந்தியாவில் 6 ஆம் நூற்றாண்டில் இருந்து வந்த “சதுரங்கா” என்ற விளையாட்டுதான், இன்று உலகம் முழுவதும் பரவிய செஸ் விளையாட்டாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் உள்ள சிறந்த செஸ் பிளேயர்கள் :

விஸ்வநாதன் ஆனந்த்,பென்டலா ஹரிகிருஷ்ணா,விடித்,பாஸ்கரன் ஆதிபன்,கிருஷ்ணன் சசிகிரன்,பரிமர்ஜன் நேகி,எஸ்.பி. சேதுராமன்,சூர்ய சேகர் கங்குலி,கொனேரு ஹம்பி,துரோணவள்ளி ஹரிகா,சௌமியா சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்