ஐரோப்பிய நாடான லித்வேனியாவில் மூடப்பட்ட விலினஸ் சர்வதேச விமான நிலையத்தை திறந்தவெளி திரையரங்கமாக மாற்றியுள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில்,இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.
இந்நிலையில், கொரோனா ஊரடங்கால் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் மக்களை உட்சாகப்படுத்தும் வண்ணம், ஐரோப்பிய நாடான லித்வேனியாவில் மூடப்பட்ட விலினஸ் சர்வதேச விமான நிலையத்தை திறந்தவெளி திரையரங்கமாக மாற்றியுள்ளனர்.
இதனையடுத்து, அந்த விமான ஓடுதளப் பாதைக்கு மத்தியில் திரையை அமைத்து, அதைச் சுற்றி கார்களில் இருந்தபடி சினிமா பார்க்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திறந்தவெளி திரையரங்கத்துக்கு கார்களில் மட்டுமே வர வேண்டும் என்றும், ஒரு காரில் இரண்டு பேர் மட்டுமே வரலாம் என்றும், எக்காரணம் கொண்டும் காரின் கதவு, ஜன்னல்களைத் திறக்கக் கூடாது போன்ற சமூக விலகலுக்கான நிபந்தனைகளும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மே முதல் தேதி முதல் இந்தத் திரையரங்கம் செயல்படத் தொடங்கியுள்ளது.
வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் மக்களுக்கு இந்த நிகழ்வு ஒரு பெரிய கொண்டாட்டமாக அமைந்துள்ளது. இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகி, டிக்கெட் விற்பனை தொடங்கியவுடனே ஆன்லைனில் டிக்கெட்டுகள் தீர்ந்துவிட்டன. இந்த திறந்தவெளி திரையரங்கில், முதல் படமாக ஆஸ்கர் விருதை வென்ற தென்கொரியத் திரைப்படமான ‘பாரசைட்’ திரையிடப்பட்டது. இப்படத்தைக் காண 160 கார்களில் மக்கள் விமான நிலையத்துக்கு வந்தனர். தற்போது மே 11 வரை லித்வேனியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஊரடங்கு உத்தரவானது மே மாதம் முழுவதும் நீட்டிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இம்மாதம் முழுவதும் இந்த திரையரங்கம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…