நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்பட வெளியிட இடைக்கால தடை – உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ’அயலான்’ படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
டேக் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில், அயலான் படத்தை தயாரித்துள்ள 24 ஏ.எம் நிறுவனம் பெற்ற ரூ.5 கோடி கடனை வட்டியோடு திருப்பி செலுத்தக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, கடனை திருப்பி செலுத்தும் வரை சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ’அயலான்’ படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.