“கொரோனா” பெயரில் ஆர்வம் காட்டிவரும் திரைத்துறையினர்!
உலகமுழுவதும் அனைத்து மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இந்தியாவில் 114 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும், இந்த கொடூர வைரஸ் தாக்கத்தால் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் இந்த வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக, இதனை இந்திய அரசு தேசிய பேரிடராக அறிவித்துள்ளது. தற்பொழுது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வரும் இந்த பெயர், தற்பொழுது சினிமாவிலும் வரவுள்ளது.
அதாவது, “கொரோனா” எனும் பெயரை வைத்து தற்பொழுது ஹிந்தியில் “கொரோனா பியார் ஹை” எனும் படம் பதிவாகியுள்ளது. இதனை இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி சங்கம் உறுதிசெய்துள்ளது. இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகள் நடைபெற்று வருகின்றன என படத்தின் தயாரிப்பாளர் கூறினார்.