இந்தியா மற்றும் உலகின் பல பகுதிகளில் இன்ஸ்டாகிராம் சேவை இன்று முடக்கப்பட்டது.
மக்கள் அதிகம் பயன்படுத்தும் பிரபல சமூக ஊடகமான இன்ஸ்டாகிராம், இந்தியாவிலும், உலகின் சில பகுதிகளிலும் இன்று காலை திடீரென்று முடங்கியது.
இன்று காலை 11 மணியளவில் சர்வர் கோளாறால் இன்ஸ்டாகிராம் சேவை இந்தியாவிலும், உலகின் சில பகுதிகளிலும் திடீரென முடங்கியதாக இணையதளங்களை கண்காணிப்பு வலைத்தளமான டவுன் டிடக்டர் கூறியது.குறிப்பாக,சுமார் 45% தங்களின் மொபைல்களில் இன்ஸ்டாகிராம் செயலி லோட் ஆகவில்லை எனவும், 33% வெப்சைட்டில் இன்ஸ்டாகிராம் லோட் ஆகவில்லை எனவும் மீதமுள்ள 22 சதவீதத்தினர் சர்வர் இணைப்பில் கோளாறுகள் ஏற்பட்டிருப்பதாக காட்டுவதாக புகார்கள் அளித்ததாக டவுன் டிடக்டர் தெரிவித்தது.எனினும்,பிழையின் காரணம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இதனால்,இன்ஸ்டாகிராம் பயனர்கள் தங்களது புகைப்படம் மற்றும் வீடியோ உள்ளிட்டவற்றை பதிவேற்ற முடியாமல் அவதிப்பட்டனர்.மேலும், பயனர்களின் கவனம் ட்விட்டர் பக்கம் திரும்பியது.இதனையடுத்து, பிற்பகல் 3 மணிக்கு பிறகு இந்த பாதிப்பு கணிசமாக குறைந்து பயன்பாட்டிற்கு மீண்டும் வந்துள்ளது.இதனால்,பெரும்பாலான பயனர்கள் தங்களது புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை மீண்டும் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையில்,இன்ஸ்டாகிராம் செயலி முடங்கியது குறித்து பயனர்கள் அதிர்ச்சியுடனும்,கேளிக்கையுடனும் ட்விட்டரில் கருத்து தெரிவித்து மீம்களை பகிர்ந்து வருகின்றனர்.இவை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதோ அவை:
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த 4…
சென்னை : ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்வதாக பேசி முடிவெடுத்து அறிவித்த நிலையில், இது ரசிகர்களுக்கு…
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…