புதிய வசதிகளை திரும்ப பெரும் இன்ஸ்டாகிராம்… எல்லாம் உங்க நல்லதுக்காக தான்.!
இன்ஸ்டாகிராம் செயலி புதிய வசதியை சோதனைக்கு உட்படுத்தியது. ஆனால் அது சரிவாராத காரணத்தால் அதனை திரும்ப பெற்றுள்ளது.
இளம் தலைமுறையினர் அதிகம் பயன்படுத்தும், அதிகமாக மூழ்கி கிடக்கும் சமூக வலைத்தளம் என்றால் அது இன்ஸ்டாகிராம் தான்.
முதலில், போட்டோ, சிறிய வீடியோ மட்டும் நல்ல தரமான தரத்தில் கொடுத்ததால் பலரையும் கவர்ந்தது. அதற்கடுத்ததாக, இந்தியாவில் டிக் டாக் தடை செய்யப்பட்ட பின்னர் ரீல்ஸ் எனும் புதிய வசதியை அறிமுகப்படுத்தி ஹிட்டடித்துள்ளது.
அதற்கடுத்து அவ்வப்போது, புதிய வசதிகளை அப்டேட் செய்து வரும் இன்ஸ்டாகிராம், புதியதாக ஒரு சோதனை முயற்சியாக, முழுத்திரையிலும், இன்ஸ்டாகிராம் பக்கம் தெரியும்படி வடிவமைத்து இருந்தது.
இது சோதனை முயற்சியாக வெளிவந்தது. ஆனால், இதனை பயன்படுத்தினால், இன்ஸ்டாகிராம் உபயோகப்படுத்துவது சிரமாக இருபப்தாக வந்த புகாரை அடுத்து, இந்த வசதி தற்போது திரும்ப பெறப்பட்டுள்ளது.