விரைவில் மெசேஞ்சர் செயலியில் மூலம் இன்ஸ்டாகிராம் மெசேஜ்!
சமூக வலைத்தளமான முகநூலை லட்சக்கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். முகநூலின் மற்றோரு சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம். பயனாளர்களின் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று உள்ளது.
இந்த இரண்டு சமூக வலைத்தளங்கள் மூலம் தங்கள் நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்பி கொள்ளும் வசதி உள்ளது. முகநூலில் உள்ள நண்பர்களுக்கு மெசேஞ்சர் செயலி மூலமாக மெசேஜ் அனுப்பும் வசதி தற்போதும் இருந்து வருகிறது. இந்த மெசேஞ்சர் செயலியை பயன்படுத்தி மட்டுமல்லாமல் வாய்ஸ் கால் ,வீடியோ கால் பேசும் வசதி உள்ளது.
இந்நிலையில் ஃ பேஸ்புக் நிறுவனம் ஒரு புதிய திட்டத்தை திட்டமிட்டு உள்ளது.அதன் படி இனி இன்ஸ்டாகிராமில் மெசேஜ் அனுப்பும் வசதியை தங்களுக்கு சொந்தமான மெசேஞ்சர் செயலி உடன் இணைக்க திட்டமிட்டு உள்ளது.அதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவ்வாறு இணைக்கப்பட்டால் சமூக வலைத்தளங்களில் மிக பெரிய மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால் ஃ பேஸ்புக் நிறுவனம் தங்களின் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்பை இணைப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
இப்படி ஃ பேஸ்புக் , இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்பை ஆகியவற்றை இணைப்பதன் மூலம் பயனாளர்களை தங்களின் நிறுவனத்துடன் இணைப்பிலே வைத்து இருக்கலாம் என ஃ பேஸ்புக் நிறுவனம் கூறுகிறது.