காதலியை அறிமுகம் செய்த சீரியல் நடிகர்.! ரொமான்டிக் புகைப்படம் உள்ளே.!

அழகு தொடரில் நடித்த அவினாஷ் தனது காதலியான தெரசாவை அறிமுகம் செய்துள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘அழகு’ சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்தவர் அவினாஷ் அசோக் .அதனை தொடர்ந்து சாக்லேட் சீரியலிலும் நடித்த இவர் தற்போது கலர்ஸ் தமிழில் அம்மன் எனும் தொடரில் நடித்து வருகிறார்.சின்னத்திரையில் மட்டுமின்றி பல ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டுள்ளார்.
டான்ஸ் கேரளா டான்ஸ் மாஸ்டர், தில்லானா தில்லானா, ஓடி விளையாடு பாப்பா, டான்ஸ் ஜோடி டான்ஸ் 2.0 போன்ற பல ஷோக்களில் பங்கேற்று பிரபலமடைந்த அவினாஷ் வழக்கமாக தனது புகைப்படங்களையும்,ஒர்கவுட் வீடியோக்களையும் வெளியிடுவார் .இந்த நிலையில் தற்போது தனது காதலியின் புகைப்படத்தை உலகிற்கு அறிமுகம் செய்துள்ளார் . சிறுவயதிலிருந்தே நண்பர்களாக உள்ள இருவரும் பல ஆண்டுகளாக ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்ததாக தெரிகிறது .இந்த நிலையில் தற்போது தனது காதலியான தெரசாவுடன் இணைந்துள்ள புகைப்படத்தை பகிர்ந்து நான் சத்தியம் செய்கிறேன். இன்று நான் உன்னை காதலிக்கும் அளவிற்கு இனிமேலும் உன்னை காதலிக்க முடியுமா என்று தெரியாது. ஆனால் நாளை நான். உன்னை இன்னும் அதிகமாக காதலிப்பேன் என்று எனக்குத் தெரியும் என்று குறிப்பிட்டுள்ளார்.தற்போது இந்த காதல் ஜோடிக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
இந்தியால் அழிந்த இந்திய மொழிகள்., தமிழ் விழித்தது, பிழைத்தது! – மு.க.ஸ்டாலின் பதிவு!
February 27, 2025
விரைவில் அமலாகும் வக்பு வாரிய திருத்த மசோதா? மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
February 27, 2025