#BigNews:சவூதி அரேபியாவின் பாடத்திட்டத்தில் ராமாயணம் மற்றும் மகாபாரதம் இணைப்பு

Default Image

சவூதி அரேபியாவின் மாணவர்கள் இப்போது புதிய பாடத்திட்டத்தின் கீழ் ராமாயணம், மகாபாரதம் போன்ற இந்து காவியங்களின் விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சவுதி அரேபியா இளவரசர் முகமது பின், கல்வித்துறைக்கான புதிய பார்வையாக விஷன் 2030 அறிமுகப்படுத்தியுள்ளார்.அதன்படி மாணவர்கள் பிற நாடுகளின் வரலாறு மற்றும் கலாச்சாரம் பல்வேறு கலாச்சாரங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் மேலும் மாணவர்களுக்கு கூடுதல் தகவல்களை தெரிந்துகொள்ள இது உதவும் என்று இளவரசர் தெரிவித்துள்ளார்.

இதன் ஒரு பகுதியாக, மாணவர்களுக்கு ராமாயணம் மற்றும் மகாபாரதம் கற்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கலாச்சார அறிவு மற்றும் வெளிப்பாட்டை விரிவுபடுத்துவதற்காக, உலகளவில் குறிப்பிடத்தக்க இந்திய கலாச்சாரங்களான யோகா மற்றும் ஆயுர்வேதம் குறித்து அறிந்துகொள்ள இந்த ஆய்வு கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபிய மாணவர்களின் பாடத்திட்டத்தில் ராமாயணம் மற்றும் மகாபாரதம் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தவிர, புதிய விஷன் 2030 இல் ஆங்கில மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது “சவுதி அரேபியாவின் புதிய பார்வை -2030 மற்றும் பாடத்திட்டங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய, தாராளமயமான மற்றும் சகிப்புத்தன்மையுள்ள எதிர்காலத்தை உருவாக்க உதவும் என்று ட்விட்டரில் கூறியுள்ளார்.

அதில் சமூக ஆய்வுகளில் இன்று எனது மகனின் பள்ளித் தேர்வின் ஸ்கிரீன் ஷாட்கல் இவை இதில்  இந்து மதம்,புத்திஸம்,ராமாயணம்,கர்மா, மகாபாரதம் மற்றும் தர்மம் பற்றிய கருத்துகள் மற்றும் வரலாறு ஆகியவை அடங்கும். நான் அவருக்கு படிக்க உதவுவதில் மகிழ்ந்தேன் என்று பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Lottery Martin - Kanguva
childrens day (1)
rinku singh
Vaiko - Apollo Hospital
doctor balaji
Rajeev gandhi co-operative hospital
kanguva review