10,000 பேரை பணிநீக்கம் செய்ய உள்ள இன்ஃபோசிஸ்..!
சமீபத்தில் அமெரிக்கா ஐடி நிறுவனமான காக்னிசென்ட் நிறுவனம் செலவை குறைத்து வருவாயை பெருக்க உயர் பதவியில் உள்ள 7,000 பேரை நீக்க முடிவு செய்தது.இந்த பாணியை பல ஐடி நிறுவனங்கள் பின்பற்றி வருகிறது.
அந்த வரிசையில் தற்போது பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் இன்ஃபோசிஸ் நிறுவனம் உயர் பதவிகள் மற்றும் மத்திய பதவியில் இருக்கும் அதிகாரிகளை மூன்று மாதம் நீக்க முடிவு செய்து உள்ளது.
சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பதவியில் உள்ள 2,200 பேர் வேலையை இழக்கின்றனர்.மத்திய பதவியில் உள்ள பல்வேறு பதவியில் இருக்கும் 4,000முதல் 10,000 பேர் இந்த ஆள் குறைப்பு நடவடிக்கையில் வேலையை இழக்கின்றனர்.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தை போல கேப்ஜெமினி நிறுவனமும் 500 பேரை வேலையில் இருந்து நீக்க முடிவு செய்து உள்ளது.