ஜோக்கர் மால்வர் வைரஸ் மூலம் தொடர்ந்து திருடப்படும் தகவல்கள்.. மேலும் 11 செயலிகலுக்கு தடை!

Default Image

பயனர்களின் தகவல்களை ஜோக்கர் மால்வர் வைரஸ் மூலம் திருடப்படுவதாக குற்றச்சாற்று எழுந்த நிலையில், மேலும் 11 செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது.

பயனர்களின் தகவல்கள் தொடர்ந்து திருடப்படுவதாக குற்றச்சாற்று எழுந்து வந்த நிலையில், இந்தியாவில் டிக்டாக், ஹெலோ, உள்ளிட்ட 52 செயலிகளை தடை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பிளே ஸ்டார் மற்றும் ஆப் ஸ்டோரில் இருந்து அந்த செயலிகள் நீக்கப்பட்டது.

அதனைதொடர்ந்து, பயனர்களின் பேஸ்புக் லாகின் விவரங்களைத் ஜோக்கர் மால்வர் வைரஸ் மூலம் திருடப்படுவதாக சைபர் பாதுகாப்பு நிறுவனமான எவினா கூறியது. இதனால் சம்பந்தப்பட்ட அந்த 25 செயலிகளை கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது.

இந்நிலையில், இந்த ஜோக்கர் மால்வர் வைரஸ் மூலம் தொடர்ந்து தகவல்கள் திருடப்பட்டு வருவதாக கூகுள் நிறுவனத்திற்கு தகவல் கிடைத்ததை அடுத்து, மேலும் 11 செயலிகளை நீக்கியுள்ளது. அந்த செயலிகளானது,

  • com.imagecompress.android
  • com.relax.relaxation.androidsms
  • com.cheery.message.sendsms
  • com.peason.lovinglovemessage
  • com.contact.withme.texts
  • com.hmvoice.friendsms
  • com.file.recovefiles
  • com.LPlocker.lockapps
  • com.remindme.alarm
  • com.training.memorygame

அந்த செயலிகளில் உள்நுழைய நமது பேஸ்புக், ட்விட்டர் மூலமாக லாகின் செய்யவேண்டும். அதன்மூலம் ஜோக்கர் ஹக்கர்கள், அந்த செயலி மூலம் உள்நுழைந்து நமது மொபைலில் உள்ள தகவல்களை திருடி வருவதாக கூகுள் செக்பாய்ண்ட் ஊழியர்கள் கண்டுபிடித்தனர்.

அதன்காரணமாக, அந்த 11 செயலிகளை தடை விதித்துள்ளது. மேலும், அந்த செயலிகளை உங்கள் மொபைலில் இருந்தால் நீக்குமாறும் கூகுள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
DMK Person RS Bharathi
Rajinikanth -Manmohan singh
pays last respects to former PM Dr Manmohan Singh
Manmohan Singh's net worth
Former PM Manmohan singh
Gold Rat