விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் விக்னேஷ் சிவன் நானும் ரவுடி தான் படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் . அதனையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தை இயக்கியிருந்தார்.ஆனால் அந்த திரைப்படம் படுதோல்வியை அடைந்தது .
அதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் காதலர் தினத்தில் அவரது அடுத்த படத்தினை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.’காத்து வாக்குல ரெண்டு காதல்”என்று பெயரிடப்பட்டிருந்த அந்த படத்தில் சமந்தா, விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.கொரோனா ஊரடங்கு காரணமாக படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பை டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.காதலி நயன்தாராவுடன் உலகம் முழுவதும் சுற்றும் விக்னேஷ் சிவன் தற்போது படம் இயக்குவது குறித்து ஆலோசித்தது பெரிய விஷயமாக பேசப்பட்டு வருகிறது.விரைவில் படத்தினை குறித்த கூடுதல் விவரங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…