தளபதி விஜய் தற்போது நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் மாஸ்டர்.இந்த படத்தை மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும் , சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன், தீனா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரவிருந்த இந்த படம் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது விஜய் ரசிகர்கள் காத்திருக்கும் ஒரே விஷயம் இப்படத்தின் ரிலீஸ் மற்றும் டீசர் தான். சமீபத்தில் தான் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தொடங்கப்பட்டது. விரைவில் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அனிருத்தின் இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, இணையதளங்களிலும் பல்வேறு சாதனைகளையும் பெற்று வருகிறது.
இந்த நிலையில் அடுத்ததாக விஜய்யின் அடுத்த மூன்று படங்களை இயக்குவது யார் என்றும், தயாரிப்பது எது என்ற தகவலும் வெளியாகியுள்ளன. ஆம் விஜய்யின் 65 படத்தை ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் போவதாகவும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் மகிழ்திருமேனி இயக்கும் படம் தான் விஜய்யின் 66 படமென்று தகவல் கசிந்துள்ளது. அதனையடுத்து விஜய்யின் 67வது படத்தை XB பிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையா இல்லையா என்பது தெரியவில்லை.
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…