சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் தான் நடிக்க வாய்ப்புள்ளதாக வடிவேலு தெரிவித்துள்ளார்.
இயக்குனர் பி வாசு இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி. ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, பிரபு, விஜயகுமார், நாசர், வினீத் ராதாகிருஷ்ணன், சோனு சூட், போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் வித்தியாசாகர் இசையமைத்திருந்தார்.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளது. அதையும் இயக்குனர் பி வாசு இயக்குகிறார். அதில் ரஜினி நடித்த வேட்டையன் கதாபாத்திரத்தில் நடிகர் ராகவ லாரன்ஸ் நடிப்பார் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், முதல் பாகத்தில் நடிகர் வடிவேலு (முருகேசன்) என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதைபோல் இரண்டாம் பாகத்திலும் நடிக்க வாய்ப்புள்ளதாக அவரே கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்துள்ளார்.
நீண்ட ஆண்டுகள் கழித்து நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் கதையை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ள படத்தின் மூலம் கதாநாயகனாக ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார்.
இந்த படத்தின் அறிவிப்பை இயக்குனர் சுராஜ் மற்றும் வடிவேலு பத்திரிக்கையாளர்களை சந்தித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தனர். அப்போது பேசிய வடிவேலு ” சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிக்க வாய்ப்புள்ளது” என கூறியுள்ளார். விரைவில் சந்திரமுகி 2 அறிவிப்பு வெளியாகும் போது வடிவேலு நடிக்கும் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…