ஈஸ்வரன் படத்தை முடித்து விட்டு இன்று முதல் மாநாடு படத்தின் படப்பிடிப்பில் சிம்பு கலந்து கொண்டுள்ளார்.
நடிகர் சிம்பு மாநாடு படத்திற்கு முன்பு சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் “ஈஸ்வரன்”என்ற ஒரு கிராம கதை கொண்ட படத்தில் நடித்து முடித்துள்ளார் . அதனுடன் அதற்கான டப்பிங் பணிகளையும் நேற்றைய தினம் முடித்தது குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில் இன்று முதல் சிம்பு அவர்கள் மாநாடு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
ஆம், மாநாடு படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் புதுவையில் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டுள்ளனர் . வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தினை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார் . மேலும் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் . மேலும் படக்குழுவினரின் பாதுகாப்பை கவனிக்க சித்த மருத்துவர் வீரபாபுவிடம் பொறுப்பை தயாரிப்பாளர் ஒப்படைத்துள்ளார் .
அதன்படி ஷூட்டிங்கில் உள்ள அனைவருக்கும் காலை மற்றும் மாலை வேளைகளில் மூலிகை கசாயம் வழங்கவுள்ளதாகவும், வீரபாபுவின் வழிகாட்டுதலின் படி ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது . மருத்துவர் வீரபாபு கொரோனா காலக்கட்டத்தில் தனது மூலிகை மருத்துவம் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலரை குணப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விரைவில் சிம்பு அவர்கள் இந்த படத்தின் ஷூட்டிங்கையும் முடித்து விடுவார் என்று கருதப்படுகிறது.
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல்…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாபிரிக்கா அணியும் கராச்சி தேசிய மைதானத்தில்…
சென்னை : மாஸ் வேணுமா மாஸ் இருக்கு...கிளாஸ் லுக் வேணுமா அதுவும் இருக்கு என்கிற வகையில் ரசிகர்களை வெகுவாக கவரும்…
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் இப்போது…
கராச்சி : நம்ம இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வியை எழுப்பும் வகையில் மோசமான ஆட்டத்தை சமீபகாலமாக வெளிப்படுத்தி…
கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில்…