பங்காளிகள் மோதி பரபரப்பை எகிற விடும் போட்டி..! Ind VS Pak : கிறிஸ் கெயிலின் " சூட்"அலப்பறை
உலககோப்பை போட்டி இங்கிலாந்தில் கோலகலமாக நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோத உள்ளது. இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது.இந்தப் போட்டி அந்த இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணி அளவில் தொடங்க உள்ளது.
இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெய்ல் இந்திய – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக இரு அணிகளின் கொடிகளை குறிக்கும் விதமாக ஆடை அணிந்து உள்ளார்.அதனை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/ByuuaFQFO7_/