INDvsBAN TESTSERIES: வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட்.!
இந்தியாவிற்கு எதிரான 2-வது டெஸ்டில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட்.
இன்று தொடங்கிய இந்தியா-வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது.
அதிகபட்சமாக மொமினுல் ஹக் 84 ரன்களும், முஷ்பிகுர் ரஹீம் 26 ரன்களும் குவித்தனர். இந்திய அணி சார்பில் அஸ்வின் மற்றும் உமேஷ் யாதவ் தலா 4 விக்கெட்களும், உனட்கட் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.