இந்தோனேசியா சுனாமி தாக்குதல் ..! 1,763 பலி…! 5,000 பேர் மாயம் …!

Default Image

இந்தோனேசியாவில் கடந்த மாதம் 29-ம் தேதி சுனாமி தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 1,763 ஆக  உயர்ந்துள்ளது .

இந்தோனேசியாவில் கடந்த மாதம் 29-ம் தேதி சுலாவேசி  தீவில் ரிக்டர் அளவில்  பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அங்குள்ள கடற்கரை நகரமான பலுவை சுனாமி தாக்கியது.
Related image
சுனாமி தாக்குதலில் பெரிதும் பாதிக்கப்பட்ட பலு நகரத்திலுள்ள பெடோபா மற்றும் பல்லோரா ஆகிய நகரங்கள் வரைபடத்திலிருந்து அழித்துவிட்டதாகவும் மேலும் அப்பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் பிணங்கள் எரிக்கப்பட்டிருக்கலாம்.  இதன் காரணமாக நோய்த்தொற்று மற்றும் மாசு உருவாகும் வாய்ப்பு உள்ளதாக பலு நகர மக்களை அதிகாரிகள் எச்சரித்தனர்.
Image result for indonesia tsunami
இதுகுறித்து  மீட்புப் பணி அதிகாரிகள் தரப்பில்  கூறும்போது, “சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பலு நகரத்தில் இன்னும் சடலங்கள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. அத்தகைய சடலங்கள் மீட்புக் குழுவினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. முடிந்த அளவு நாம் மாசு ஏற்படாமல் அந்த உடல்களை அகற்ற வேண்டும். நாங்கள் எங்கள் குழுவினருக்கு தடுப்பூசிகளைச் செலுத்தி இருக்கிறோம். இருப்பினும் மாசு ஏற்படலாம். இதன் காரணமாக பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படலாம்.  இதுகுறித்து பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்” என்றார்.
Image result for indonesia tsunami
இந்நிலையில் இந்தோனேசிய பேரிடர் மீட்பு மையம் தற்போது தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்தோனேசியாவில் ஏற்பட்ட பூகம்பம், சுனாமிக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,763 ஆக உயர்ந்துள்ளது .அதேபோல்  5,000 பேர் மாயமாகியுள்ளனர்.இவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும்  இந்தோனேசிய பேரிடர் மீட்பு மையம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்