ஊரடங்கை அமல்படுத்துவதற்காக பேயாக உருமாறிய போலீசார்.!
கொரோனா வைரஸின் தாக்கம் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை 20 லட்சத்திற்கும் அதிகமானோரை கொரோனா தாக்கியுள்ளது. 1.27 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இதனால், உலகில் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தோனிசியாவிலும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. அந்நாட்டில் ஜாவா தீவில் உள்ள கெபு எனும் கிராமத்தில் ஊரடங்கை மக்கள் மீறாமல் இருக்க இரவில் ஊர்மக்களில் சிலரை பேய் போல வேடமிட்டு இரவில் உலவ விடுகின்றனர். இதனால், இரவில் தேவையின்றி வெளியில் வருபவர்கள் வீட்டிலேயே இருக்கின்றனர்.
இந்த யோசனையை அந்த கிராமத்து தலைவர் கூறியுள்ளார். தற்போது காவலர்களும் இந்த பேய் வேடமிட்டு வீதியில் உலாவருகின்றனராம்.