இந்தோனேசியாவை காலி செய்த சுனாமி ..!400-ஐ நெருங்கிய பலி எண்ணிக்கை ..!பலர் படுகாயம் ..!

Default Image

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 384 ஆக உயர்ந்துள்ளது.

Related image

இந்தோனேசியாவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவு கோலில் 7.5 ஆக பதிவாகியுள்ளது.இந்நிலையில் இந்தோனேசியாவில் சுலவேசி தீவுப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

The ruin of a mosque badly damaged by the earthquake and tsunami

இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.இதன்பின் நேற்று சுலவேசி தீவை சக்தி வாய்ந்த சுனாமி தாக்கியது.அதிலும் குறிப்பாக பாலு மற்றும் டோங்க்லா பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆழிப்பேரலைகள் 6 அடி உயரத்திற்கு எழுந்த நிலையில் கடலோர பகுதிகளை முழுவதும் சூறையாடியது.

Image result for indonesia tsunami

இந்நிலையில் இன்றைய  நிலவரப்படி இந்தோனேசியாவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 384 ஆக உயர்ந்ததாக அந்நாட்டில் உள்ள பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்தனர்.இதனால் பலி எண்ணிக்கை 400-ஐ நெருங்கி வருகிறது. மேலும் பலர்  உயிருக்கு ஆபத்தான நிலையில்  காயங்களுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
geetha jeevan
sprouted green gram (1)
Srilanka Minister Chandrasekaran say about Tamilnadu Fisherman issue
govi. chezhian about anna university issue
eps about anna university issue
ViratKohli