53 பேருடன் காணாமல் போன நீர்மூழ்கி கப்பலின் இடத்தை கண்டறிந்த இந்தோனேஷியா!!

Default Image

கடற்படைக்கு சொந்தமான 53 பேருடன் மாயமான நீர்மூழ்கி கப்பலின் இடத்தை கண்டறிந்த இந்தோனேஷியா அதிகாரிகள்.

இந்தோனேஷிய கடற்படையைச் சோ்ந்த கே.ஆா்.ஐ. நங்காலா – 402 நீா்மூழ்கிக் கப்பல் 53 பேருடன் பாலி தீவு அருகே கடந்த புதன்கிழமை அன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது அந்தக் கப்பலுடனான தொடா்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் 200 மீட்டா் ஆழம் வரையிலான அழுத்தத்தை மட்டுமே தாக்குப்பிடிக்கக் கூடிய அந்த நீா்மூழ்கிக் கப்பல், 600 முதல் 700 மீட்டா் வரையிலான ஆழத்துக்கு அது சென்றிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்திருந்தன.

இதையடுத்து, அந்த கப்பலைத் தேடும் பணியில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜொ்மனி உள்ளிட்ட நாடுகள் இந்தோனேசியாவுக்கு உதவி வருகின்றன. கடலுக்குள் மாயமான கப்பலைக் கண்டறிந்து, அதில் சிக்கியுள்ள 53 பேரை உயிருடன் மீட்பதற்கான இறுதிக்கட்ட முயற்சியில் அந்த நாட்டு கடற்படை தீவிரமாக ஈடுபட்டு வந்தன.

இந்த நிலையில், 53 பேருடன் காணாமல் போன கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் அமைந்திருக்கும் ஒரு பகுதியை அடையாளம் கண்டுள்ளதாக அந்நாட்டு தேடல் குழுக்கள் தெரிவிக்கின்றனர். கப்பலில் ஆக்ஸிஜன் சில மணி நேரத்திற்குள் வெளியேறும் என்று அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

அதாவது, காணாமல்போன நீர்முழ்கி கப்பல் பாலிக்கு வடக்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்றும் அங்கு டைவ் பாயிண்டிற்கு அருகில் நீரின் மேற்பரப்பில் எண்ணெய் காணப்படுகிறது என கூறியுள்ளனர். இதைத்தவிர நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து வந்திருக்கக்கூடிய ஒரு பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர்.

இராணுவத்தின் மத்திய தகவல் பிரிவின் தலைவர் ஜெனரல் அக்மத் ரியாட் இதனை பிரபல ஊடகத்தில் தெரிவித்துள்ளார். ஒரு கடற்படைக் கப்பல் 50 முதல் 100 மீட்டர் (164 முதல் 328 அடி) ஆழத்தில் வலுவான காந்த அதிர்வு கொண்ட ஒரு பொருளைக் கண்டறிந்தாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்