இந்தோனேசியா : எரிமலை வெடித்து 13 பேர் உயிரிழப்பு ….!

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்ததில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள செமேரு எனும் எரிமலை 3,617 மீட்டர் உயரம் கொண்டது. இந்த எரிமலையிலிருந்து நேற்று லேசாக புகை கிளம்பியுள்ளது. இதனையடுத்து இன்று எரிமலை திடீரென வெடித்து சாம்பல் புகை உயரமாக சென்று, காற்றில் கலந்துள்ளது. இந்த எரிமலை வெடிப்பு காரணமாக அதன் அருகே இருந்த வீடுகள் சேதமடைந்துள்ளது.
மேலும் ஒரு பாலமும் சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்து நடந்த பொழுது ஒருவர் உயிரிழந்த நிலையில் நாற்பத்தி ஒரு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்துள்ளனர். தற்பொழுது இதனால் காயமடைந்தவர்கள் 100 ஆக அதிகரித்துள்ளதுடன், பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியிலிருந்து 900-க்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
நேபாளத்தில் இன்று அதிகாலையில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. பீகாரிலும் லேசான அதிர்வு.!
February 28, 2025
தமிழ்நாடு வெல்லும்: “இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா?” – முதல்வர் ஸ்டாலின் .!
February 28, 2025
சீமான் வீட்டு காவலாளிகளுக்கு மார்ச் 13ம் தேதி வரை நீதிமன்ற காவல்!
February 28, 2025
தமிழ்நாட்டின் இந்த 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் – வானிலை மையம்!
February 28, 2025