இந்தியாவின் இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாறு…!!!
இந்திரா காந்தி அவர்கள் ஜவஹர்லால் நேரு மற்றும் கமலா நேருவிற்கு மகளாக நவம்பர் 19, 1917ல் அலகாபாத்தில் பிறந்தார். இவர் 1942ல் ஃபெரோஸ் காந்தி என்பவரை திருமணம் செய்தார். இவரது இயற்பெயர் இந்திரா பிரியதர்சினி, திருமணத்திற்கு பின் இவர் இந்திரா காந்தி என சுருக்கமாக அழைக்கப்பட்டார். இவருக்கு ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி என இரு மகன்கள் இருந்தனர்.
இவர் ஒரு சிறந்த அரசியல் திட்டமிடலாளரும், சிந்தனையாளரும் ஆவார். அரசியல் அதிகாரத்துக்கான அசாதாரண பற்றை கொண்டிருந்தார். 1959 மற்றும் 1960ன் போது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார்.
ஆணாதிக்க மனப்பாங்கை கொண்ட இந்திய சமுதாயத்தில், ஒரு பெண்ணிடம் எதிர்பார்க்கப்படும் தன்மைகளுக்கு மாறாக வலுவான பலத்துடன் மிக உயர்ந்த பதவியான பிரதமர் பதவியில் 1966ல் பொறுப்பேற்று, பின் 1977ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தோல்வியுற்று, 1980ல் மீண்டும் பிரதம மந்திரியாக பொறுப்பேற்றார்.
இந்தியாவின் இரும்பு பெண்மணியான இந்திராகாந்தி, சீக்கியர்களின் கோபத்திற்கு ஆளானார், தனது சொந்த காவலாளிகளான சத்வந்த் சிங் மற்றும் பீண்ட் சிங் ஆகியோரால் 1984, அக்டொபர் 31ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இவர்கள் இருவருமே சீக்கியர்கள். இந்திரா காந்தியை மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்ற வழியில் அவரது உயிர் பிரிந்தது. இரும்பு பெண்மணியின் உடலில் இருந்து 31 குண்டுகள் எடுக்கப்பட்டதாக மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளது.