கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் ஆராய்ச்சி முக்கியம் – பில் கேட்ஸ்
கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கு இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி முக்கியமானதாக இருக்கும் என்று மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
கிராண்ட் சேலஞ்ச்ஸ் வருடாந்திர கூட்டத்தில் (Grand Challenges Annual Meeting 2020) உரையாற்றினார் பில் கேட்ஸ் .அவரது உரையில்,கடந்த 20 ஆண்டுகளாக இந்தியா தனது மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது.இது இந்தியாவை “மிகவும் ஊக்கமளிக்கிறது”. “இப்போது, இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கு முக்கியமானதாக இருக்கும். குறிப்பாக பெரிய அளவில் தடுப்பூசிகளை தயாரிக்கும் போது முக்கியமானதாக இருக்கும்.
உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் கொரோனா வைரஸை முடிவுக்கு கொண்டு வரும் ‘பெரும் சவாலில்’ ஈடுபட்டுள்ளனர்.கொரோனாவிற்க்கான முதல் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி எம்.ஆர்.என்.ஏ (mrna vaccine)ஆக இருக்கும்,”.
தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் அறிவியலின் வேகம் குறிப்பிடத்தக்கதாக உள்ளது என்று கேட்ஸ் கூறினார். “ஆனால் இந்த வேலைகள் அனைத்தையும் மீறி, இப்போதே, விஞ்ஞானம் நகர்ந்தது போல ,தொற்றுநோய் இன்னும் நமக்கு முன்னால் உள்ளது.”இந்த வைரஸ் முழு உலகப் பொருளாதாரத்தையும் ஆழ்ந்த மந்தநிலைக்குள் தள்ளியுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம்,” என்று அவர் கூறினார்.