இந்தியாவின் முதல் பெண் போர்ட்டர்..!
ரயில் நிலையங்களில் சுமை தூக்கும் பணிக்கு பெண்களை அனுமதிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ஜெய்ப்பூர் ரயில்வே நிலையத்தில் சிவப்புச் சட்டை அணிந்த கூலித் தொழிலாளியாக மஞ்சு தேவி என்ற இளம்பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.
கூலியாக இருந்த கணவரின் மரணத்தைத் தொடர்ந்து, மூன்று குழந்தைகளின் தாயான மஞ்சுவுக்கு அந்த உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
ரயில் பயணிகளின் அதிகப்படியான பெட்டி படுக்கைகளை சுமக்கும் கூலித் தொழிலுக்கு உடல் வலுவும் ஆரோக்கியமும் அவசியம். பெண்கள் பலவீனமானவர்கள் என்று அவர்களுக்கு இத்தொழில்வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்தது.