அமெரிக்காவில் கருணைக்கொலை செய்யப்பட்ட இந்தியா வழங்கிய யானை
இந்தியா சார்பில் கடந்த 1961-ஆம் ஆண்டு ஒரு குட்டி யானையை, அமெரிக்காவிற்கு வழங்கப்பட்டது .அன்பளிப்பாக வழங்கப்பட்ட இந்த யானைக்கு ‘அம்பிகா’ என்று பெயர் வைக்கப்பட்டது.மேலும் இந்த யானை அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் வளர்க்கப்பட்டது.
இந்த பூங்காவிற்கு வரும் அனைவரின் கணவனத்தையும் ஈர்த்தது அம்பிகா.கடந்த சில நாட்களுக்கு முன் நோயால் அவதிப்பட்டு வந்தது.மேலும் அம்பிகாவிற்கு வயது 72 ஆக இருந்ததால் முதுமை காரணமாக அவதிப்பட்டது. இதனால் சிகிச்சையும் அளிக்கப்பட்டது.ஆனால் அதுவும் சரி வராத நிலையில் வேறு வழியில்லாமல் அம்பிகாவை கருணைக்கொலை செய்தனர்.