பாகிஸ்தான்:எந்த வல்லரசு நாடுகளும் இந்தியாவுக்கு ஆணையிட முடியாது என்று பாக்.பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கத்துக்கு பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசே காரணம் என அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதன் காரணமாக எதிர்கட்சிகள், பிரதமர் இம்ரான்கான் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.
3 மாதத்துக்குள் நாடாளுமன்ற தேர்தல்:
இதற்கிடையில்,நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டும் என அதிபருக்கு பிரதமர் இம்ரான்கான் பரிந்துரை செய்தார். பிரதமர் இம்ரான் கானின் பரிந்துரையை ஏற்று அதிபர் ஆரிப் ஆல்வி நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு 3 மாதத்துக்குள் தேர்தல் நடத்த அதிபர் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
பிரதமர் அறிவுறுத்த முடியாது:
பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூறி எதிர்க்கட்சிகள் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.அதன்படி,இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில்,பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என தீர்ப்பு வழங்கியது.மேலும், நாடாளுமன்றத்தை கலைக்க அதிபருக்கு பிரதமர் அறிவுறுத்த முடியாது என்றும்,பாகிஸ்தான் துணை சபாநாயகரின் உத்தரவு அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இன்று வாக்கெடுப்பு:
மேலும்,பாகிஸ்தான் நாடாளுமன்றம் செயல்படுவதற்கு தடையில்லை என்றும்,இன்று (ஏப்.9) ஆம் தேதி காலை 10 மணிக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு மக்களிடையே பிரதமர் உரை:
இந்நிலையில்,நாட்டு மக்களிடையே நேற்று உரையாடிய பாக்.பிரதமர் இம்ரான்கான்,தான் நீதித்துறையை மதிப்பதாகவும், ஆனால்,உச்சநீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பு வருத்தமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும்,குதிரை பேரத்தில் ஈடுப்பட்டுள்ளன எதிர்கட்சிகளின் செயல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் இம்ரான் கான் கூறினார்.
துடிக்கும் அமெரிக்கா:
அதே சமயம்,ஆட்சிக்கட்டிலிலிருந்து தன்னை இறக்க அமெரிக்கா துடிப்பதாகவும்,சர்வதேச சாதிகளால் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இம்ரான் கான் குற்றம் சாட்டினார்.அமெரிக்காவால் இறக்குமதி செய்யப்பட்ட அரசை ஒருபோதும் தான் ஏற்றுக்கொள்ளப்ப்போவதில்லை என்றும்,புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது நாடு முழுவதும் மக்கள் வீதிகளில் இறங்கி அமைதியான போராட்டங்களை நடத்துமாறும் வலியுறுத்தினார்.
சுயமரியாதை கொண்ட இந்தியர்கள்:
மேலும்,பேசிய இம்ரான் கான்,”இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் எந்த நாடும் கட்டளையிடுவதில்லை.ஏனெனில்,இந்தியர்கள் சுயமரியாதை கொண்டவர்கள்.மேலும்,எந்த வல்லரசு நாடுகளும் இந்தியாவுக்கு ஆணையிட முடியாது”,என்று பாராட்டு தெரிவித்தார்.
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…