#Breaking:உக்ரைனில் இந்தியர்கள் பணயக் கைதிகளாக இல்லை – இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி!
உக்ரைனில் இந்தியர்கள் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப் படவில்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி.
உக்ரைன் மீது ரஷ்யா உக்கிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில்,எந்த நேரத்திலும் ஆபத்து நிகழலாம் என்று கருதி உக்ரைன் கார்கிவ் பகுதியில் உள்ள மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் வெளியேறிய பின்னர் 3 குறிப்பிட்ட பகுதிகளுக்கு வர வேண்டும் என்றும் உக்ரைனில் உள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று அவசர அறிக்கை வெளியிட்டிருந்தது.
ஆனால்,சில இடங்களில் இந்திய மாணவர்கள் வெளியேற முடியாமல் உக்ரைன் வீரர்களால் தடுக்கப்பட்டிருந்தார்கள் என்று செய்திகள் வெளியாகியது.இதனால்,அவர்கள் பயனைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில்,உக்ரைனில் உள்ள மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் யாரும் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்படவில்லை என உக்ரைனில் உள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்திய மாணவர்களை மீட்டு,அவர்களை தாயகம் அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதப்படுத்தியுள்ளதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Our Embassy in Ukraine is in continuous touch with Indian nationals in Ukraine. We note that with the cooperation of the Ukrainian authorities, many students have left Kharkiv yesterday. We have not received any reports of any hostage situation regarding any student: MEA pic.twitter.com/1pyZ5u1TIy
— ANI (@ANI) March 3, 2022